Home /News /national /

போராட்டம், வன்முறை, துப்பாக்கிச்சூடு...! முசாபர்பூரின் நிலை என்ன...? நியூஸ் 18 கள ஆய்வு

போராட்டம், வன்முறை, துப்பாக்கிச்சூடு...! முசாபர்பூரின் நிலை என்ன...? நியூஸ் 18 கள ஆய்வு

Youtube Video

  • News18
  • Last Updated :
    குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்கும், காவல்துறையே காரணம் என்று பொதுமக்களும், பேராட்டக்காரர்களே காரணம் என்று காவல்துறையும் குற்றம்சாட்டுகின்றது.

    கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்திரபிரதேச மாநிலம் முசாபராபாத், மீரட், சம்பல், பெரோசாபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறையினர், அருகில் இருந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைக்கும் காட்சிகளும் வெளியாகின. அன்றைய தினம் போராட்டத்தில் கலந்துகொண்ட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்தான் 5 பேரும் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த போலீசார், போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், துப்பாக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர். போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதுன், காவல்துறையினர் துப்பாக்கியை பிரயோகிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், போராட்டத்தின் மையப்பகுதியான முசாபர்பூர் நகருக்கு சென்ற நியூஸ் 18 செய்திக்குழு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியது. 72வயதான ஹாஜி அமீத் ஹசனின் வீட்டில் உடைந்த இந்த கடிகாரம், பண்ணிரெண்டு மணியுடன் நின்றுபோயுள்ளது. அந்த இரவு நேரத்தில்தான் காவல்துறையினர் வீட்டிற்குள் புகுந்ததாகவும், எதிர்பட்ட அனைத்து பொருட்களையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கண்ணீர்மல்க கூறுகிறார் அமீத் ஹசன்.

    ஷூ கடை நடத்தி வரும் அன்வர் இலாஹியின் வீடு, அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அந்த பகுதி இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்தவரான இலாஹியின் வீட்டில் நுழைந்த போலீசார் கண்ணில் பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கியதுடன், பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்று விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார் இலாஹி.

    முசாபர்நகரில் அமைந்துள்ள மீனாட்சி சௌக் என்ற இந்த இடம், இஸ்லாமியர்களின் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். போராட்டத்திற்கு பிறகு இங்குள்ள 67 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை, போராட்டகாரர்களிடமிருந்து வசூலிப்போம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ள நிலையில், தங்களுடைய கடைகள் அதற்காகதான் சீல் வைக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால், கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தவே, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் நியூஸ் 18 செய்திக் குழுவிடம் தெரிவித்துள்ளது. ஆனால், சீல் வைக்கப்பட்ட பல கடைகளுக்குள் சிசிடிவி கேமராக்களே இல்லை என்று கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடைபெற்ற கலவரத்திலிருந்து நகரம் மெல்ல, மீண்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகளால் முசாபர்நகர் மீண்டும் போராட்ட களமாகியுள்ளது.
    Published by:Sankar
    First published:

    Tags: Citizenship Amendment Act, Uttar pradesh

    அடுத்த செய்தி