Home /News /national /

கத்தோலிக்க கார்டினலாக, முதன்முறையாக தலித் பாதிரியார் தேர்வு... யார் இந்த அந்தோனி பூலா?

கத்தோலிக்க கார்டினலாக, முதன்முறையாக தலித் பாதிரியார் தேர்வு... யார் இந்த அந்தோனி பூலா?

புதிய கார்டினல் அந்தோனி பூலா

புதிய கார்டினல் அந்தோனி பூலா

India’s first Dalit Christian cardinal | போப் பிரான்ஸிஸ் தற்போது 21 பாதிரியார்களை புதிய கார்டினல்களாக தேர்வு செய்துள்ளார். இந்த 21 பேரில் இரண்டு இந்தியர்களும் அடக்கம்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவாகக் கருதப்படுபவர் போப் ஆண்டவர். கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமையிடமாகக் கருதப்படும் வாட்டிகனில் உள்ள திருச்சபையில்  போப் ஆண்டவர் தலைமை பொறுப்பு வகிப்பவர். தற்போதைய போப் ஆண்டவராக இருப்பவர் போப் பிரான்சிஸ்.

    இந்த போப் ஆண்டவரையே கார்டினல்கள் என்ற தலைமை பாதிரியார்கள் குழு தான் தேர்வு செய்யும். கத்தோலிக்க தேவாலயங்களில் ஊழியம் செய்யும் பாதிரியார்களில் இருந்து இந்த கார்டினல்களை போப் ஆண்டவர் தேர்வு செய்வார். இந்நிலையில், போப் பிரான்ஸிஸ் தற்போது 21 பாதிரியார்களை புதிய கார்டினல்களாக தேர்வு செய்துள்ளார். இந்த 21 பேரில் இரண்டு இந்தியர்களும் அடக்கம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆர்ச் பிஷப் அந்தோனி பூலா என்பவர் புதிய கார்டினலாக தேர்வாகியுள்ளார். இந்தியாவில் இருந்து தேர்வாகும் முதல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கார்டினல் இவரே. அதேபோல், முதல் தெலுங்கு கார்டினல் என்ற பெருமையையும் ஆந்தோனி பெற்றுள்ளார். 62 வயதான ஆந்தோனி பூலா, ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்ணூலை சேர்ந்தவர். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இவர் ஹைதராபாத்தின் ஆர்ச் பிஷப்பாக நியமனம் செய்யப்பட்டார்.

    இதையும் படிங்க: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - ஒரே நாளில் 90,000 பேர் தரிசனம்

    அதேபோல் 21 பேரில் இந்தியாவின் இரண்டாவது நபராக கோவாவைச் சேர்ந்த ஆர்ச் பிஷப் பிலிப்பே நெரி பிரோரோ தேர்வாகியுள்ளார். இவருக்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 69 வயதான போப் பிலிப்பே கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள அல்டோனா என்ற கிராமத்தில் பிறந்தார்.


    இவர் 2003ஆம் ஆண்டில் இருந்து கோவாவின் ஆர்ச் பிஷப்பாக உள்ளார். கோவாவில் இருந்து தேர்வாகும் முதல் கார்டினல் இவரே. இந்த கார்டினல் பொறுப்பில் இருப்பவர்கள் தான் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வார்கள். புதிய கார்டினல்கள் பதவியேற்கும் விழா வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி போப் ஆண்டவர் தலைமையில் நடைபெறும். இந்திய மக்கள் தொகையில் சுமார் 2.4 சதவீதம் பேர் கிறிஸ்துவர்கள் எனப்படும் நிலையில், இந்தியாவில் உள்ள கிறிஸ்துவர்களில் 37 சதவீதம் பேர் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Christianity, Goa cm, Pope Francis

    அடுத்த செய்தி