வருகைப்பதிவு அழைப்பின் போது 'ஜெய்ஹிந்த்' சொல்ல ம.பி. அரசு உத்தரவு

news18
Updated: May 16, 2018, 5:14 PM IST
வருகைப்பதிவு அழைப்பின் போது 'ஜெய்ஹிந்த்' சொல்ல ம.பி. அரசு உத்தரவு
news18
Updated: May 16, 2018, 5:14 PM IST
மத்திய பிரதேச பள்ளிகளில் வருகைப்பதிவு அழைப்பின் போது மாணவர்கள்  ‘ஜெய்ஹிந்த்’ என பதில் சொல்ல வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெய்ஹிந்த் சொல்லும் பழக்கத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி  அக்டோபர் மாதம்  சோதனை முயற்சியாக  சாட்னா மாவட்ட பள்ளிகளில் ஜெய்ஹிந்த் சொல்லும் பழக்கம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்களிடம் சிறுவயதில் இருந்தே தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து,தற்போது அங்குள்ள 1.22 லட்சம் அரசு பள்ளிகளுக்கும் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் இதனை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தேச பக்தியை யாரும் கட்டாயப்படுத்த முடியாது எனவும் அரசு கல்வியின் தரத்தை குறித்தும்  அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைப் பற்றியும் முதலில் சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பிய பின்,  ஜீலை 1 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்