கேரளாவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு கட்டடங்கள்!

கேரளாவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு கட்டடங்கள்!
இடிக்கப்பட்ட கட்டிடம்
  • News18
  • Last Updated: January 12, 2020, 3:55 PM IST
  • Share this:
கேரள மாநிலம் மராடு பகுதியிலிருந்த மீதமுள்ள இரண்டு கட்டடங்களும் வெடிவைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள மராடு பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதன்படி, இந்த கட்டிடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன.

அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் அடுத்தடுத்து 2 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. சில நிமடங்களில் இடிந்து விழுந்த அந்தக் கட்டிடங்கள் மிகப் பெரிய அளவில் புகையை வெளியிட்டன.


இந்தநிலையில், இன்று காலை 11 மணியளவில் 2 கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. இந்த இரண்டு கட்டிடங்களும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு ஏதும் சேதம் ஏற்படுத்தாமல் இடிக்கப்பட்டன. இந்த நாள்களில் மட்டும் 4 உயரமான கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

 
Also see:

First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்