Home /News /national /

மொத்தமாக பா.ஜ.கவில் இணைந்த ஜனதா தளம் தலைவர்கள்- நிதிஷ்குமாருக்கு தொடரும் நெருக்கடி

மொத்தமாக பா.ஜ.கவில் இணைந்த ஜனதா தளம் தலைவர்கள்- நிதிஷ்குமாருக்கு தொடரும் நெருக்கடி

பாஜகவில் இணைந்த ஜனதா தளம் கட்சியினர்

பாஜகவில் இணைந்த ஜனதா தளம் கட்சியினர்

தாத்ரா நகர் ஹைவேலி, டாமன்-டையூ பகுதிகளைச் சேர்ந்த ஜனதா தளம் கட்சியினர் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணி இணைந்து போட்டியிட்டது. மறுபுறம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி இணைந்து போட்டியிட்டது. அதில், பா.ஜ.க கூட்டணியில் பா.ஜ.க 74 தொகுதிகளிலும், ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    ராஷ்டிரியா ஜனதா தளம் 75 தொகுதிகளிலும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதனையடுத்து, ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைத்தது. பா.ஜ.க கூட்டணியில் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். அதனையடுத்து, பா.ஜ.க, நிதிஷ் குமார் இடையே தொடர்ந்து முரண்பாடு எழுந்துவந்தது.

    இந்தநிலையில், ஆகஸ்ட் 10-ம் பா.ஜ.கவுடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார். அதனையடுத்து, அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். அதனையடுத்து, ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்களை பா.ஜ.க தனது பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில், தாத்ரா நகர் ஹைவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்திலுள்ள ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இணைந்து கொண்டனர். முன்னதாக மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் பகுதியைச் சேர்ந்த ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர். பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்த மூன்றாவது முறையாக ஜனதா தளம் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பா.ஜ.கவில் இணைகின்றனர். இது ஜனதா தளம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Archana R
    First published:

    Tags: Bihar, BJP

    அடுத்த செய்தி