Video | அதிகாரியை விரட்டி விரட்டி தாக்கிய பாஜகவினர் - மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு சம்பவம்

news18
Updated: June 29, 2019, 8:18 AM IST
Video | அதிகாரியை விரட்டி விரட்டி தாக்கிய பாஜகவினர் - மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு சம்பவம்
வீடியோ காட்சிகள்
news18
Updated: June 29, 2019, 8:18 AM IST
மத்திய பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு அரசு அதிகாரியை பாஜக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதனை அடுத்து, ஆகாஷ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆகாஷுக்கு ஆதரவாக அவரது கட்சியினர் கிரிக்கெட் மட்டையுடன் பேனர வைத்த நிகழ்வும் நடந்தது.

இந்நிலையில், சத்னா நகர் பஞ்சாயத்து தலைமை சுகாதார அலுவலர் சோனியை பாஜக பிரமுகர் சுஷில் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த சோனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன் தினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது சோனி மற்றும் பாஜக பிரமுகர் சுஷில் படேல் தரப்பிற்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...