ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரூ.330 கோடியைத் தாண்டிய ஆண்டு வருவாய்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரூ.330 கோடியைத் தாண்டிய ஆண்டு வருவாய்

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜை சீசன் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு வருவாய் 330 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த டிசம்பர் 27ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த 14ம் தேதியும் நடைபெற்றது. மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். வியாழன் இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

தொடர்ந்து ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். அதனை தொடர்ந்து கோயில் நடை காலை 7:00 மணிக்கு சாத்தப்பட உள்ளது. மாசி மாத பூஜைகளுக்காக மீண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.

இதனிடையே ஐயப்பன் கோயிலின் மண்டல மகர விளக்கு காலத்தில் வருவாயானது 330 கோடியை தாண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்கள் மிகக் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Kerala. Sabarimala