ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல்

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதி நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வருகின்ற  ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம், வருகின்ற ஜூன் 21 முதல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடைவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் விஜயகுமார் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதி நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,  மகாராஷ்டிராவில் இருந்து தேர்வான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

    Also Read : இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப திட்டமா? மத்திய அரசு விளக்கம்

    அத்துடன், தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. தற்போது, திமுக தலைமையிலான கூட்டணிக்கு 159 எம்எல்ஏ-க்கள் உள்ளதால், காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களில் 4 திமுக வசம் செல்வது உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில், 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் போட்டி ஏற்படும் நிலையில், ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Parliament, Rajya sabha MP