Home /News /national /

சொந்த தொகுதியில் வெற்றிப்பெறாத அண்ணாமலை தான் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா? - தெலங்கானா முதலமைச்சர் கேள்வி

சொந்த தொகுதியில் வெற்றிப்பெறாத அண்ணாமலை தான் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா? - தெலங்கானா முதலமைச்சர் கேள்வி

கேசிஆர், அண்ணாமலை, மு.க.ஸ்டாலின்

கேசிஆர், அண்ணாமலை, மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவெடுப்பார் அதை வைத்து ஸ்டாலின் அரசை கலைத்து விடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.”

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Hyderabad, India
    சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தான் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா என தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் அம்மாநில சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரேவின் அரசு கவிழ்க்கப்பட்டு அங்கு பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அதாவது உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டால் திமுகவிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவெடுப்பார் என கூறியிருந்தார்.



    இந்நிலையில் இன்று தெலங்கானா சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், “தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவெடுப்பார் அதை வைத்து ஸ்டாலின் அரசை கலைத்து விடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தான் ஸ்டாலின் அரசை கவிழ்க்க போகிறாரா? இல்லை ஏக்நாத் ஷிண்டே போல தான் உங்கள் அரசியலா?” என கூறினார்.

    இதையும் வாசிக்க: கேரள மக்கள் பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் - ராகுல் காந்தி புகழாரம்



    இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, கேசிஆரின் அராஜக ஆட்சியில் தெலங்கானா சிக்கியுள்ளது எனவும் கேசிஆர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தங்கள் முதல் தேர்தலில் வெற்றி பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Annamalai, CM MK Stalin, Kcr, Telangana

    அடுத்த செய்தி