இஷா அம்பானி திருமணவிழா அன்னதானத்துடன் தொடங்கியது

திருமண நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஸ்வதேஷ் பஜார் என்ற பெயரில் பாரம்பரிய கலைகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கண்காட்சிக்கும் ஏற்பாடு

Web Desk
Updated: December 7, 2018, 11:17 PM IST
இஷா அம்பானி திருமணவிழா அன்னதானத்துடன் தொடங்கியது
அன்னதானம் பரிமாறும் இஷா அம்பானி
Web Desk
Updated: December 7, 2018, 11:17 PM IST
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணத்தையொட்டி, உதய்பூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முகேஷ் அம்பானி மகள் இஷா மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே பிரமால் மகன் ஆனந்த் பிரமால் ஆகியோரின் திருமணம் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெறவிருக்கும் முதல் திருமணம் இது என்பதால், பிரமாண்டமான ஏற்பாட்டோடு ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இன்று தொடங்கி டிசம்பர் 10 வரை நான்கு நாட்களுக்கு உதய்ப்பூரில் அன்னசேவா என்ற பெயரில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மூன்று வேலையும் சுமார் 5100 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அன்னதான நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, மணமகன் குடும்பத்தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உணவுகளை பரிமாறினர்.

Loading...
அதுமட்டுமல்லாது, திருமண நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஸ்வதேஷ் பஜார் என்ற பெயரில் பாரம்பரிய கலைகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க... 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...