தனது கோரிக்கையை ஏற்காவிட்டால் மகாராஷ்டிரா அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் பானத்தை விற்பனை செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது. இதில், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே விற்பனை செய்யக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க ;
லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி!
பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் மூலம், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மது குடிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், 'ஒயின் என்பது மதுபானம் அல்ல. இதன் விற்பனை அதிகரித்தால் விவசாயிகளுக்குத்தான் நல்ல லாபம் கிடைக்கும்.' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஒயின் பானத்தை சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும் நடவடிக்கையை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதை செய்யத் தவறினால் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
இதுதொடர்பாக அன்னா ஹசாரே கூறுகையில், 'மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன். ஒயினை சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்வது என்பது எதிர்கால தலைமுறையை பாழ்படுத்தி விடும். இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன்.' என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.