பிப்ரவரி 14ஆம் தேதியை பசுமாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பசுமாடுகள்தான் இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என நமக்கு தெரியும். பசு நம்மை வாழவைக்கும் நம் வளத்தை குறிக்கும். பசுக்களை காமதேனு எனவும் கோமாதா என அழைப்பதற்கு காரணம் மனித சமூகத்திற்கு பசு தாய் போல் செயல்படுகிறது. மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாச்சாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது.
பசுக்களில் பல பலன்கள் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். நம் தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நல்ல சக்தி பரப்பும் வகையில் இந்நாளை கொண்டாடுவோம்.
இது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் முறையான ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Cow, Valentine's day