மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை அரசு தியாகிகள் தினமாகவும், சர்வோதயா தினமாகவும் நினைவு கூர்கிறது. இந்நிலையில், கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நாளை நாள் முழுவதும் விலங்குகளை கொல்வதற்கும், கடைகளில் இறைச்சி விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை சர்வோதயா தினம் என்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பெங்களூரு மாநகராட்சி இறைச்சி விற்பனைக்கு தடை உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்திருந்தது. பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 விமானப்படை கண்காட்சி பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமான நிலையத்தில் அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
எனவே, இந்த விமான கண்காட்சி நடைபெறும் யலஹங்கா விமான படை தளத்தின் 10 கிமீ சுற்றளவில் இறைச்சிகளை விற்க தடை விதித்து பெங்களூரு மாநகராட்சி உத்தரவு பிறபித்துள்ளது. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை இந்த தடை அமலில் உள்ளது. மீறினால் பிபிஎம்பி சட்டம் 2020, இந்திய விமானச் சட்டம் 1937 பிரிவு 91 ன் கீழ் தண்டனை என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகள் தங்கள் கழிவுகளை பொது இடங்களில் தான் பெரும்பாலும் கொட்டுகின்றனர். இவற்றை கழுகு உள்ளிட்ட பறவைகள் உண்ணுகின்றன. அவை அந்த பகுதிகளை சுற்றி வானில் நீண்ட நேரம் வட்டமிட்டு பறக்கும் என்பதால் கண்காட்சியின் போது விமானங்களும் பறவைகளும் மோதி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த தடையை விதித்துள்ளோம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.