Home /News /national /

கணவருடன் உறவில் இருந்த பெண்ணை பழிவாங்க மனைவி செய்த விபரீத செயல்

கணவருடன் உறவில் இருந்த பெண்ணை பழிவாங்க மனைவி செய்த விபரீத செயல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காயத்ரி மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது.

    தனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை பழிவாங்க கூலிக்கு ஆள் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்யவைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கொடூர சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள கோன்டாபூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. காயத்ரி தனது கணவருடன் அங்கு வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் அதே பகுதியில் வசித்து வரும் நிலையில், சமீப காலத்தில் தான் அந்த பெண்ணுடன் காயத்ரியின் குடும்பத்திற்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

    காயத்ரியின் கணவரும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பதன் மூலமாக அறிமுகம் ஆகியுள்ளனர். இவரும் படிப்பு தொடர்பாக பேசத் தொடங்கி நட்பு மலர்ந்த நிலையில், அந்த பெண் கணவர் மூலமாக காயத்ரியிடமும் அறிமுகமாகியுள்ளார். காயத்ரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த பெண்ணை உதவிக்காக தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். மூவரும் ஒரே வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வரை ஒன்றாக வசித்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் தனது கணவருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளதாக காயத்ரிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் ஏப்ரல் 24ஆம் தேதி காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.

    இத்துடன் நிற்காமல் அந்த பெண்ணை பழிவாங்க வேண்டும் என திட்டமிட்ட காயத்ரி சமாதானம் பேசிக் கொள்ளலாம் என அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அந்த பெண்ணிடம் சிறிது நேரம் பேசிய காயத்ரி, வீட்டின் அறைக்குள் கூட்டி சென்றுள்ளார். அங்கு, நான்கு பேரை கூலிக்கு அழைத்து வந்த அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை யாரிடமாவது வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் ஞாபக மறதி - பதறிய கணவர்

    படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், காயத்ரியும், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Crime News, Gang rape, Hyderabad

    அடுத்த செய்தி