பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்டவரை அடித்துத் துவைத்த பொதுமக்கள்! கேரளாவில் பதற்றம்

உடற்கூராய்வு சோதனையில், இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இயற்கையாக மரணமடையவில்லை என்றும் தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்டவரை அடித்துத் துவைத்த பொதுமக்கள்! கேரளாவில் பதற்றம்
கேரள குற்றம்சாட்டப்பட்டவர்
  • News18
  • Last Updated: December 7, 2019, 6:17 PM IST
  • Share this:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த நால்வரை காவல்துறையினர் நேற்று என்கவுண்டர் செய்தனர். காவல்துறையினரின் செயலுக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

கேரளா மாநில பாலக்காட்டில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் கூலி வேலை செய்யும் இரண்டு சிறுமிகள் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அதில், ஒரு சிறுமிக்கு 9 வயது, மற்றொரு சிறுமிக்கு 13 வயது. இருவரும் சகோதரிகள். 13 வயது சிறுமி உயிரிழந்து 52 நாள்கள் கழித்து தங்கையும் உயிரிழந்தார். உடற்கூராய்வு சோதனையில், இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இயற்கையாக மரணமடையவில்லை என்றும் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்துக்கு கண்டம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அதனையடுத்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஐந்து பேரையும் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


ஐவரும் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மது என்ற குட்டி மதுவை ஒரு கும்பல் சராமாரியாக தாக்கியது. பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களைக் கவல்துறையினர் என்கவுண்டர் செய்த நிலையில், கேரளாவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Also see:
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்