முகப்பு /செய்தி /இந்தியா / சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள்!

சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள்!

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

அடிப்படை வேலைகள் செய்யும் உழைப்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் சுதந்திர தின விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் பங்கேற்றனர்.

  • Last Updated :

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 76-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், பிணவறை பணியாளர்கள், முத்ரா திட்டத்தில் கடன் வாங்குவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 விழா குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, கொண்டாட்டங்களைச் சுற்றியுள்ள உற்சாகத்தை அதிகரிக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின அணிவகுப்புக்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களில் தூய்மைப் பணியாளர்கள்,  தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மேசைகளைத் தயாரிக்கும்  தொழிலாளர்கள் அடங்குவர்.

top videos

    அதேபோல இந்த சுதந்திர தினத்திலும், டெல்லியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் அடிப்படை வேலைகள் செய்யும் உழைப்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் சுதந்திர தின விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், பிணவறை பணியாளர்கள், முத்ரா திட்டத்தில் கடன் வாங்குவோர், கூலி வேலை செய்யும்  உழைப்பார்களைச்  சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வைக்கப்பட்டனர்.

    First published:

    Tags: Anganvadi, Cleaning workers, Independence day, Sanitary workers