• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் - விசித்திரமான காரணம்..

தங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் - விசித்திரமான காரணம்..

Wine shop

Wine shop

தங்கள் கிராமத்திற்கு மதுக்கடை ஒதுக்கித் தந்து சீக்கிரமாகவே மதுக்கடை திறக்க வேண்டும் என சாலையில் இறங்கி கிராமத்து பெண்கள் போராடியிருக்கின்றனர்.

  • Share this:
தங்கள் கிராமத்தில் புதிதாக மதுக்கடை ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண்கள் சாலையில் இறங்கி போராடியுள்ளனர்.

மதுக்கடைகள் வேண்டாம் எனவும், பள்ளி, கோவில்கள் அருகே இருக்கக்கூடிய மதுக்கடைகளை இடமாறுதல் செய்ய சொல்லி வலியுறுத்தியுமே பெண்கள் போராடி வந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதே போல சாலை வசதி, பேருந்து வசதி, மின்சார வசதி, குடிநீர்/கழிப்பிட வசதி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் வீதிகளுக்கு வந்து போராடியிருப்பதை தான் நாம் இதுவரையிலும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் தங்கள் ஊரில் மதுக்கடை திறக்க வேண்டும் என ஆண்களுக்கு பதிலாக பெண்கள் தொடங்கியிருக்கும் இந்த போராட்டம் முற்றிலும் புதுமையாகவும், வினோதமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த போராட்டத்துக்கு மிகவும் விசித்திரமான காரணம் ஒன்றையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள பெடமெடப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தான் தங்கள் ஊரில் மதுக்கடை தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

Also read:  தேவருக்கு அவமதிப்பு.. நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

கேட்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.. இது உண்மை தான். மாநில அரசு தங்கள் கிராமத்திற்கு மதுக்கடை ஒதுக்கித் தந்து சீக்கிரமாகவே மதுக்கடை திறக்க வேண்டும் என சாலையில் இறங்கி கிராமத்து பெண்கள் போராடியிருக்கின்றனர். ஏற்கனவே இந்த கோரிக்கையை அதிகாரிகளுக்கு வைத்திருக்கின்றனராம் அப்பெண்கள். ஆனால் பெண்களின் அந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் தற்போது வீதிக்கு வந்து போராடியுள்ளனர். தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த வினோதமான போராட்டத்துக்கு என்ன காரணம் என அவர்களிடம் கேட்டதற்கு, தங்கள் கிராமத்து ஆண்கள் குடிக்கக் கூடாது என நினைத்தோம், அவர்கள் குடிக்காமல் இருந்தால் தான் எங்கள் வாழ்க்கை மேம்படும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள் குடிப்பதை நிறுத்தவில்லை, எங்கள் ஊரில் பிளாக்கில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மதுவகைகள் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

Also read:  குளித்து முடித்த கணவருக்கு துண்டு கொடுக்காததால் மனைவி கொலை..

50 முதல் 100 ரூபாய் என அதிக விலைக்கு விற்பனை செய்வதால் வேறு வழியில்லாமல் எங்கள் ஊர் ஆண்களும் அதிக விலையை கொடுத்து குடிக்கிறார்கள். இதனால் எங்களின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊரில் மதுக்கடை இருந்தால் குறைந்த விலைக்கே மதுவை வாங்கிவிடலாம். எனவே தான் நாங்கள் மதுக்கடை கோரி போராடுவதாக அப்பெண்கள் தெரிவித்தனர்.

நியாயமான கோரிக்கை தான் என ஒருபக்கம் நினைக்கத் தோன்றுகிறதல்லவா...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: