ஆந்திராவில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் ஒருவர் சார்ஜ் போட்டபடியே லேப்டாப் மூலம் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மேக்கவாரி கிராமத்தை சேர்ந்தவர் சுமலதா. பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி செய்து வரும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஒர்க் ப்ரம் ஹோம் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை தன்னுடைய லேப்டாப்பை சார்ஜ் போட்ட நிலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று லேப்டாப் சார்ஜ் 10 சதவீதத்திற்கும் குறைந்து அதிலிருந்து ஹை வோல்டேஜ் மின்சாரம் சுமலதா மீது பாய்ந்தது.
கதவை அவர் தாழ் போட்டிருந்ததால் அவரால் உடனடியாக வெளியேற முடியவில்லை.
சுமார் 40 சதவீதம் அளவிற்கு தீக்காயமடைந்த சுமலதாவை பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையும் படிக்க: சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொல்ல முயற்சி.. பிஹெச்டி மாணவி கைது
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமலதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.