Home /News /national /

இளைஞரை காதல்வலையில் வீழ்த்தி மோசடி.. 6மாதம் குடும்பம் நடத்தி 6 லட்சத்துடன் ஓடிய பெண் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இளைஞரை காதல்வலையில் வீழ்த்தி மோசடி.. 6மாதம் குடும்பம் நடத்தி 6 லட்சத்துடன் ஓடிய பெண் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சுஹாசினி

சுஹாசினி

சுஹாசினியின் ஆதார் கார்டை கொண்டு அவரது முகவரியை கண்டுபிடித்தார். அந்த முகவரி நெல்லூர் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  ஆந்திராவில் திருமணம் என்ற பெயரில் இளைஞரை மோசடி செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சுனில் குமார் ( வயது 29). சத்தியநாராயணபுரத்தில் வசித்து வரும் சுனில் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுஹாசினி என்ற பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுஹாசினி ஏடிபி ஃபைனான்ஸ் கார்ப்பரேசனில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

  இவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. எனக்கு பெற்றோர் இல்லை நான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன் என சுஹாசினி கூறியுள்ளார். இதனையடுத்து சுனில் தனது வீட்டில் சுஹாசினி குறித்து பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றுள்ளார். இவர்களுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

  Also Read: ‘பிரதமர் மோடி குறித்து திமுகவினர் மட்டும் பொய் பேசலாமா?’: கிஷோர் கே.சாமி கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

  சுனில் குடும்பத்தினருக்கு சுஹாசினி 3 பவுன் நகை வாங்கிக்கொடுத்துள்ளனர். இந்நிலையில் தன்னை சிறுவயதில் இருந்து பராமரித்து வந்த மாமாவுக்கு உடல்நிலை சரியில்லை அவருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் திருமணத்துக்கு முன்பு சில கடன்கள் இருக்கிறது எனக் கூறி சுனில் குமாரிடம் இருந்து சிறுக சிறுக 6 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.

  தங்களக்கு  தெரியாமல் மகன் அவரது மனைவிக்கு 6 லட்சம் வரை பணம் கொடுத்தது சுனில் பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சுஹாசினியிடம் அவரது பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். இந்த 6 லட்சம் பணத்தை என்ன செய்தாய் எனக் கேட்டுள்ளார். இந்த சம்பவம் ஜூன் 6-ம் தேதி நடந்துள்ளது. அதற்கு அடுத்தநாள் ஜூன் 7-ம் தேதியில் இருந்து சுஹாசினியை காணவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சுஹாசினிக்கு பல முறை தொடர்பு கொண்டும் அவரை லைனில் பிடிக்கமுடியவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த சுனில் சுஹாசினியின் ஆதார் கார்டை கொண்டு அவரது முகவரியை கண்டுபிடித்தார். அந்த முகவரி நெல்லூர் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. அந்த அட்ரஸூக்கு சென்ற சுனிலுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. சுஹாசினி ஏற்கெனவே திருமணமானவர் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கும் விவரம் தெரியவந்தது. நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

  Also Read: Kishore K Swamy: திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி கைது

  இந்நிலையில் சுனிலை தொடர்புக்கொண்டு பேசிய சுஹாசினி, நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கேன். உன்னிடம் வாங்கிய பணத்தை விரைவில் திருப்பி தருவேன். போலீஸிடம் சென்றால் வீணாக பிரச்னை வரும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையின் உதவியை சுனில் நாடினார். சுஹாசினி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Andhra Pradesh, Cheating, Crime | குற்றச் செய்திகள், Love marriage, Police, Tirupathi

  அடுத்த செய்தி