• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் மனைவி - நெகிழ்ச்சி சம்பவம்

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் மனைவி - நெகிழ்ச்சி சம்பவம்

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் மனைவி

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் மனைவி

பத்மாவதியின் கனவில் அவரது கணவர் அங்கிரெட்டி தனக்கு கோவில் கட்டும்படி சொன்னதால் இந்த கோவிலை கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் ஆந்திராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திரபிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனித்துவமான சம்பவம் ஒன்று பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. மறைந்த கணவருக்காக கோவில் கட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி என்ற பெண். பத்மாவதி என்ற பெண் மிகவும் பழமைவாதம் மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தாயை போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்து வருகிறார். அங்கிரெட்டி - பத்மாவதி திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

    Also Read : ஆன்லைனில் பாடம் படிக்காத மகன் கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட தாயின் சோக முடிவு

    இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி அங்கிரெட்டி உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் பத்மாவதி தினமும் தவித்து வந்துள்ளார். பத்மாவதியின் கனவில் அவரது கணவர் அங்கிரெட்டி தனக்கு கோவில் கட்டும்படி சொன்னதால் இந்த கோவிலை கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கோவிலில் தனது கணவரின் பலிங்கு உருவ சிலையும் அவர் நிறுவி உள்ளார்.

    Also Read : தமிழக அரசுக்கு வரும் ஒவ்வொரு ஒரு ரூபாயின் வரவும்... செலவும்...

    கணவர் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். மேலும் இந்த கோவிலில் பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார். இந்த கோவிலை கட்டுவதற்கு அவரது மகன் சிவசங்கர் ரெட்டி மற்றும் அங்கிரெட்டியின் நண்பர் திருப்பதி ரெட்டி உதவி புரிந்ததாக பத்மாவதி தெரிவித்துள்ளார். இந்த தம்பதியனருக்கு மகனாக பிறந்தது என்னுடைய பாக்கியம் என்று சிவசங்கர் ரெட்டி பெருமையுடன் கூறி வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: