• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதா... சட்டமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதா... சட்டமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது

ஜெகன்மோன் ரெட்டி

ஜெகன்மோன் ரெட்டி

மாநிலத்திலேயே மிகப்பெரும் நகரமாக விசாகப்பட்டினம்தான் உள்ளது. இங்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் ஐதராபாத்துடன் போட்டியிடும் அளவுக்கு விசாகப்பட்டினம் வளர்ந்து விடும். : ஜெகன் மோகன்

  • Share this:
    ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதா சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், சட்டமன்றத்தில் மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனை விட சிறப்பான மசோதா ஒன்றை கொண்டு வருவோம் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

    ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சந்திரபாபுநாயுடு விஜயவாடா அருகில் உள்ள அமராவதியை மாநிலத்தின் தலைநகர் என்று அறிவித்தார்.

    தொடர்ந்து அமராவதியை மாநிலத் தலைநகருக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில் ஆந்திராவிற்கு மூன்று தலை நகரங்கள் அமைக்கப்படும். அவற்றில் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம், சட்டமன்ற தலைநகராக அமராவதி, நீதித்துறை தலைநகராக கர்னூல் ஆகியவை இருக்கும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

    3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இன்று சர்ச்சைக்குரிய மசோதா சட்டமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இதன்பின்னர் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தற்போதுள்ள விதிகளை வலுப்படுத்தவும், சட்ட விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், அதிக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்படும் என்றார்.

    முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக சாடிய ஜெகன், 'ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகளை மீறி, தலைநகரை அமைப்பதற்காக 50 ஆயிரம் ஏக்கர் நிலைத்தை கையகப்படுத்தியுள்ளார். அவை விஜயவாடாவுக்கும், குண்டூருக்கும் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சாலைகள், மின்சாரம், கழிவுநீர் பாதை உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றால் ரூ. 1 லட்சம் கோடி வரைக்கும் செலவாகும். அதாவது ஒரு ஏக்கருக்கு அரசு 2 கோடி ரூபாயை செலவழிக்க நேரிடும். அந்த அளவுக்கு பணம் அரசிடம் இல்லை.

    இந்த சூழலில் மாநிலத்திலேயே மிகப்பெரும் நகரமாக விசாகப்பட்டினம்தான் உள்ளது. இங்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் ஐதராபாத்துடன் போட்டியிடும் அளவுக்கு விசாகப்பட்டினம் வளர்ந்து விடும். இதன் அடிப்படையில் விசாகப்பட்டினத்தை தலைநகராக்க முடிவு செய்துள்ளோம்.' என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: