முகப்பு /செய்தி /இந்தியா / ஆண் நண்பருடன் தொடர்பு.. கண்டித்த கணவருக்கு விதவிதமாக உணவு கொடுத்து கொலை.. மனைவி சிக்கியது எப்படி?

ஆண் நண்பருடன் தொடர்பு.. கண்டித்த கணவருக்கு விதவிதமாக உணவு கொடுத்து கொலை.. மனைவி சிக்கியது எப்படி?

பைடி ராஜு - ஜோதி தம்பதி

பைடி ராஜு - ஜோதி தம்பதி

கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கழுத்தை நெரித்து கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

கணவருக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்த மனைவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் பைடி ராஜு - ஜோதி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே ஜோதிக்கும் நூக்கராஜூ என்பவருக்கும் பழக்கம் இருந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் அவருடன் தொடர்பு வைத்துள்ளார்.

நூக்கா ராஜுவுடன் தனிமையில் இருப்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அடிக்கடி இருவரும் சந்தித்துள்ளனர். இந்நிலையில் தனக்கு சிபிஐ அலுவலகத்தில் தூய்மை பணியாளர் வேலை கிடைத்து இருப்பதாக கணவரிடம் கூறியிருக்கிறார் ஜோதி. ஆனால் தினமும் வேலைக்கு செல்வதாக புறப்பட்டு தனது காதலனுடன் தனிமையில் சந்திக்க அந்த வாடகை வீட்டுக்கு சென்றுள்ளார் ஜோதி.

மனைவியின் தொடர்பை அறிந்த கணவர் ராஜு, வாடகை வீட்டுக்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டார். இனிமேல் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்த மனைவி ஜோதியை நம்பி மீண்டும் ஒன்றாக வாழ்ந்துள்ளார் கணவர் ராஜு.

ஆனால் காதலனுடனான தொடர்பை கைவிட முடியாத ஜோதி, கணவரை கொலை செய்ய சதித் திட்டம் போட்டுள்ளார். அதன்படி விதவிதமாக சமைத்த ஜோதி அதில் தூக்க மாத்திரை கலந்து அதை கணவர் ராஜுவுக்கு பரிமாறியுள்ளார்.

அனைத்து உணவிலும் தூக்க மாத்திரை கலந்திருந்ததால் அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ராஜு மயங்கி விழுந்தார். உடனே காதலன் நூக்கா ராஜுவுக்கு செல்போனில் பேசி அவரை வீட்டிற்கு வரவழைத்த ஜோதி, இருவரும் சேர்ந்து ராஜுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த செய்த ஜோதி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்ததும் தனது கணவர் அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்து விட்டார் என கூறியிருக்கிறார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ராஜுவை சோதனை செய்து அவர் இறந்து விட்டார் என கூறிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் ராஜுவின் உடலை ஜோதியும்,  நூக்கா ராஜுவும் பைக்கில் எடுத்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கரிக்கட்டையாக எரிந்த பின்னர் இருவரும் வீட்டிற்கு வந்து தனிமையில் இருந்துள்ளனர். பின்னர் மறுநாள் தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீசார் விசாரணை நடத்தினர். ஜோதியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் நூக்கா ராஜுவுடன் நீண்ட நேரம் பேசியிருப்பது தெரிந்தது.

இருவரிடமும் தீவிர விசாரணை நடத்த ராஜுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கழுத்தை நெரித்து கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Andhra Pradesh, Crime News, Murder case