கடந்த திங்கள் கிழமை ஆந்திர மாநிலம் குண்டூரில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றிருக்கிறது. அந்த முகாமிற்கு வந்த நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் இணையம் மூலம் தனக்கு பழக்கமான நபர் ஒருவர் தன்னை ஏமாற்றி தன்னிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகார் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுரைச் சொந்த ஊராகக் கொண்ட அந்த மாணவி ஐதராபாத்தில் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். அவர் தனது தந்தையின் கணக்கில் இருந்து சிறிது சிறிதாக இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்து செலவு செய்துள்ளார். தனது தந்தை கண்டுபிடிக்கும் முன்பு அந்த பணத்தை திருப்பி கட்ட எண்ணிய அந்த மாணவி, அதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்கும் முடிவு செய்துள்ளார். அதன்படி இணையத்தில்தான் சிறுநீரகத்தை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவியை பிரவீன் ராஜ் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார். மாணவியின் சிறுநீரகத்தை 3 கோடி ரூபாய்க்கு தான் விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளார்.
தள்ளாத வயதிலும் ஐயப்பனை தரிசிக்க வந்த 99 வயது மூதாட்டி.. வியந்து போன பக்தர்கள்
மாணவியும் நம்பி தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பதினாறு லட்சம் ரூபாயை எடுத்து பிரவீன் ராஜூக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு பாதிப்பணமும் வரவில்லை. அறுவை சிகிச்சையும் நடைபெறவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தான் கொடுத்த பதினாறு லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு பிரவீன் ராஜ் டெல்லியில் ஒரு முகவரியைக் கொடுத்து, அங்கு சென்று பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். மாணவி டெல்லி சென்று பார்த்த போது அந்த முகவரி போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்தை அறிந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
தனது வங்கி கணக்கில் இருந்து பதினாறு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து தனது மகளிடம் கேட்டுள்ளார் தந்தை. அப்போது மகள் மர்ம நபரிடம் பணம் கொடுத்து ஏமாந்து போனது பற்றி அறிந்து, மாணவியை குண்டூருக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பயத்தில் மாணவி ஐதராபத்தில் இருக்கும் விடுதியில் இருந்து தலைமறைவாகி விட்டார்.
94 சதவீத 'காதல்' போக்சோ வழக்குகள் விடுதலையில் முடிகிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, Online Frauds