ஆந்திராவில் கொரோனாவுக்கு அஞ்சி வயல்வெளிக்கு சென்று குடியேறிய கிராமவாசிகள்

மாதிரிப் படம்

கொரோனா தொற்றுக்கு அஞ்சி கிராமத்தை விட்டு வெளியேறி ஆந்திர கிராமவாசிகள் வயல்வெளியில் வசிக்கின்றனர்.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை எட்டி தற்போது கொஞ்ச கொஞ்சமாக குறைந்துவருகிறது. கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதையும் புரட்டி எடுத்துவிட்டது. இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பை முழுவதுமாக சிதைத்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவுக்கு அஞ்சி பொதுமக்கள் பலரும் பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகின்றனர்.

  அதில் ஒரு பகுதியாக, தங்களை தற்காத்து கொள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெடபஞ்சனி மண்டலம், சிவாடி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனர் ரெட்டி, வெங்கடரமணா மற்றும் ஈஸ்வர்யா ஆகியோர் கிராமத்தில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வயல்வெளியில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் கொட்டகைகளில் குடியேறினர். கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அவர்களின் உறவினர்கள் சிலரும் தற்போது கிராமத்தை விட்டு வெளியேறி வசிப்பதற்காக தற்காலிக வீடுகள் அமைத்து வருகின்றனர்.

  எங்கள் வயலில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது காய்கறிகளை பயிரிட்டு இருக்கிறோம். எங்களிடம் உள்ள பசுக்கள் மூலம் அதன் பால் கரந்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். எங்களிடம் உள்ள காய்கறிகளில் தேவைக்கு போக மீதமுள்ளவற்றை நண்பர்களுக்கு வழங்கி வருகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: