முகப்பு /செய்தி /இந்தியா / “வீடு வேணும்னா அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்..” - மேசேஜ் அனுப்பிய அதிகாரி... தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

“வீடு வேணும்னா அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்..” - மேசேஜ் அனுப்பிய அதிகாரி... தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

கிராம வருவாய் அதிகாரியை தாக்கிய பெண் மற்றும் அவரது உறவினர்கள்

கிராம வருவாய் அதிகாரியை தாக்கிய பெண் மற்றும் அவரது உறவினர்கள்

பெண் ஒருவர் ஜெகன் அண்ணா காலனியில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாவிற்கு விண்ணப்பித்த பெண்ணிற்கு, தகாத முறையில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிய கிராம வருவாய் அதிகாரிக்கு, பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

ஜெகன் அண்ணா காலனி என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பி.எல்.புரம் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் ஜெகன் அண்ணா காலனியில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்தப் பெண்ணிற்கு கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் நாயுடு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில் இலவச வீட்டு மனை தேவை என்றால் என்னுடன் ஒரு நாள் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண், அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள், கிராம வருவாய் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதனையடுத்து அவர் தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காப்பள்ளி காவல்நிலைய போலீசார் கிராம வருவாய் அதிகாரியை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Andhra Pradesh, Crime News, Government officers, Woman thrashes