ஹோம் /நியூஸ் /இந்தியா /

தீபாவளி பட்டாசுக் கடையில் தீ விபத்து.. உடல் கருகி இருவர் பலி.!

தீபாவளி பட்டாசுக் கடையில் தீ விபத்து.. உடல் கருகி இருவர் பலி.!

விஜயவாடா பட்டாசு கடை தீ விபத்து

விஜயவாடா பட்டாசு கடை தீ விபத்து

நேற்று இரவு சித்தூர் மாவட்டம் வடமாலைப் பேட்டையில், தற்காலிக பட்டாசுக்கடைகளில் நடந்த மற்றொரு தீ விபத்தில் 5 பட்டாசுக் கடைகள் சேதமடைந்தன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Vijayawada, India

  ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பட்டாசுக் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தீபாவளியை முன்னிட்டு, காந்தி நகர் பகுதியில் உள்ள ஜிம்கானா கிளப் மைதானத்தில் பட்டாசுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது.

  இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை பெரும் போராட்டத்திற்கு பின் அணைத்தனர். இந்த சம்பவத்தில் பட்டாசு கடை ஊழியர்கள் இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தீயில் கருகின.

  இதேபோல் நேற்று இரவு சித்தூர் மாவட்டம் வடமாலைப் பேட்டையில், தற்காலிக பட்டாசுக்கடைகளில் நடந்த மற்றொரு தீ விபத்தில் 5 பட்டாசுக் கடைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

  இதையும் வாசிக்க: காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து : உடல் கருகிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

  மேலும் இதேபோல் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் விசாலா என்ற சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Deepavali, Diwali, Fire accident, Fire crackers