திருப்பதியில் ஓராண்டுக்குப் பிறகு பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம்
திருப்பதியில் ஓராண்டுக்குப் பிறகு பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம்
Tirupati
பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை வாங்கும் பக்தர்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
திருப்பதியில் ஓராண்டுக்குப் பிறகு பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏழுமலையான் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.
ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை வழிபடுவதற்காக ஆன்-லைனில் வெளியிடப்படும் லட்சக்கணக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் பத்தே நிமிடத்தில் முன்பதிவு செய்தனர்.
இதனால் இணையதள சேவை குறைவான வேகத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இயலாத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாளை 16ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் இன்று காலை 9 மணி மணி முதல் நாள் ஒன்றுக்கு 15,000 என்ற எண்ணிக்கையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றது.
பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை வாங்கும் பக்தர்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஆனால் பக்தர்கள் கண்டிப்பாக 2 டேஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.