ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் படகு இல்லம் மூழ்கி விபத்து.. சுற்றுலா பயணி பலி, 4 பேருக்கு சிகிச்சை

கேரளாவில் படகு இல்லம் மூழ்கி விபத்து.. சுற்றுலா பயணி பலி, 4 பேருக்கு சிகிச்சை

கேரளாவில் படகு விபத்து

கேரளாவில் படகு விபத்து

ஆலப்புழாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி ஆந்திர மாநில சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் முக்கிய சுற்றுலாத் தளமாக ஆலப்புழா திகழ்கிறது. நீரால் சூழப்பட்ட குட்டி குட்டி தீவுகளாய் காட்சி அளிக்கும் இந்த ஆலப்புழாவிற்கு வரும் சுற்றுலாவாசிகள் அங்கு தவறாமல் படகு சவாரி செய்வது வழக்கம். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் சிறப்பான அனுபவத்தை தரும் விதமாக அங்கு பெரிய படகுகளை வீடு போன்ற அறைகளாக மாற்றி படகு இல்லங்கள் அமைக்கப்பட்டன.

இந்த படகு இல்லத்தை வாடகைக்கு எடுத்து சுற்றுலா பயணிகள் படகில் தங்கி இரவை கழிப்பார்கள். அப்படித்தான் ஆந்திர மாநிலத்தில் இருந்து ராமசந்திர ரெட்டி என்ற நபர் தனது மகன் ரஜேஷ் ரெட்டி உறவினர் நரேந்தர், நரேஷ் ஆகியோருடன் ஆலப்புழாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். நேற்று இரவு அப்பகுதியை சுற்றி பார்த்தப்பின்னர், படகு இல்லம் ஒன்றை புக் செய்து இரவை அதில் கழித்துள்ளனர்.

அந்த படகு இன்று அதிகாலை 4 மணி அளவில் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதை பக்கத்து படகுகளில் இருந்தவர்கள் கவனித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்த நிலையில், படகுக்குள் இருந்த 5 பேரும் நீரில் மூழ்கினர். இந்த 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராமசந்திரா ரெட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையும் படிங்க: வெறுப்பு பேச்சு சர்ச்சை - பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்கு பதிவு

அவரின் மகன் ராஜேஷ் ரெட்டி, உறவினர் நரேந்தர் மற்றும் நரேஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், படகில் வேலை பார்த்த ஊழியர் சுனந்தனும் சிகிச்சை பெற்று வருகின்றார். படகின் அடிபாகத்தில் ஓட்டை ஏற்பட்டு அதில் நீர் புகுந்ததால் படகு முழ்கியதாக முதல் கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

First published:

Tags: Accident, Boat capsized, Boat immersed, Kerala