Home /News /national /

திருப்பதி மலைப்பாதையில் ராட்சத பாறை சரிந்து சாலைகள் சேதம்.. பேருந்துகள் செல்வது எப்படி?

திருப்பதி மலைப்பாதையில் ராட்சத பாறை சரிந்து சாலைகள் சேதம்.. பேருந்துகள் செல்வது எப்படி?

திருப்பதி மலைப்பாதையில் ராட்சத பாறை சரிந்ததன் காரணமாக, சாலைகள் சேதமடைந்ததால் பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்படுகின்றன.

    திருப்பதியில் இருந்து ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில், காலை 6 மணியளவில் சுமார் 5 டன் எடையுள்ள பெரிய பாறை திடீரென சரிந்து விழுந்தது. தொடர்ந்து, உருண்டு சென்ற பாறை வளைவுப்பாதையாக ஒன்றன் கீழ் ஒன்றாக உள்ள 3 பாதைகளில், சரிந்து விழுந்தது.

    இதனால், மலைப்பாதையில் மூன்று இடங்களில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகள் ஆங்காங்கே துண்டான நிலையில், சில இடங்களில் மோசமான விரிசலும் காணப்படுகிறது. இதனிடையே, அவ்வழியாக சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுனர், மண்சரிவை கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மண்சரிவால், அந்தப் பாதை வழியிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த வந்த தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர், தொடர்ந்து, சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரக்கிளைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Also Read : அண்ணாமலையார் கோவிலின் உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா?

    இதனிடையே, மாற்றுப்பாதை வழியாக, முதல் அரை மணி நேரத்திற்கு திருமலைக்கு செல்லும் பேருந்துகளும், அடுத்த அரை மணி நேரத்திற்கு திருமலையில் இருந்து கீழே இறங்கும் பேருந்துகளும், சுழற்சி முறையில் தற்போதைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi

    அடுத்த செய்தி