ஹோம் /நியூஸ் /இந்தியா /

800 தலைவர்கள் கைது: தொடரும் போராட்டம்! அசராமல் 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன்

800 தலைவர்கள் கைது: தொடரும் போராட்டம்! அசராமல் 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி, விசாகபட்டினம் மற்றும் கர்னூல் ஆகிய 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கான மசோதா, அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலம் அறிவிக்கப்பட்டதால், சட்டப்பேரவையை சுற்றி 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 800 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

  எனினும், அமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்ததால், பதற்றம் ஏற்பட்டது. டயர்களுக்கு தீவைத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டினர்.

  175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 151 எம்எல்ஏக்கள் இருப்பதால் மசோதாவை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 58 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமேலவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு மேலவையில் இம்மசோதா நிறைவேறுவது சவாலாக இருக்கும்.

  Also see:

   

  Published by:Karthick S
  First published:

  Tags: Andhra Pradesh