முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.30 லட்சம்.. சரிந்து விழுந்த 110 அடி அலங்கார கோபுரம்.. பதறி ஓடிய பக்தர்கள்..!

ரூ.30 லட்சம்.. சரிந்து விழுந்த 110 அடி அலங்கார கோபுரம்.. பதறி ஓடிய பக்தர்கள்..!

கோபுரம் சரிந்து விபத்து

கோபுரம் சரிந்து விபத்து

ஆந்திர மாநிலம் பல்நாடு அருகே 110 அடி உயர மின் அலங்கார கோபுரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் பல்நாடு அருகேயுள்ள குருவையாபாளையத்தில் உள்ள சிவன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு மகா சிவராத்திரிக்காக, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மின் அலங்கார கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

சவுக்கு கட்டைகள் மற்றும் மூங்கில்களால் உருவான இந்த கோபுரத்தை தூக்கி நிறுத்தும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, கோபுரம் சரிந்து விழுந்தது.

' isDesktop="true" id="892336" youtubeid="Nix1SYRDlUg" category="national">

உடனடியாக சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் தெறித்து ஓடினர். இதில் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

First published:

Tags: Accident, Andhra Pradesh