• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லேட்டாக வந்த மாணவர்களை நிர்வாணப்படுத்தி முட்டிப்போட வைத்த பள்ளி

லேட்டாக வந்த மாணவர்களை நிர்வாணப்படுத்தி முட்டிப்போட வைத்த பள்ளி

நிர்வாணப்படுத்தி முட்டிப்போட்ட மாணவர்கள்

நிர்வாணப்படுத்தி முட்டிப்போட்ட மாணவர்கள்

ஆந்திரா சித்தூரில் உள்ள பள்ளி மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
 பள்ளிக்கு காலதாமதமாக வந்த மாணவர்களை நிர்வாணப்படுத்தி வகுப்பறைக்கு வெளியே முட்டிப்போட வைத்த கொடுமை ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரில் சைதன்யா பாரதி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் காலதாமதாக வந்த 9 மற்றும் 10 வயது மதிக்கத்தக்க மாணவர்களை, நிர்வாணப்படுத்தி வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்கள் முட்டிப் போட வைத்துள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அளித்துள்ள பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை பள்ளியில் நடந்த இந்த தண்டனை குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து, குழந்தை உரிமை ஆர்வலர் அச்சட் ராவ் கூறுகையில், "பாஸ்கோ சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி இந்த ஆணைக்குழுவை நாங்கள் கோரியுள்ளோம் என்றும் , உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Also see... ஆங்கிலத்தில் அசத்தும் திருவண்னாமலை சிறுமி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: