ஆந்திராவில் போதைக்காக சானிடைசர் குடித்த 200 பேர்

சானிடைசர்

ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தை தொடர்ந்து கடப்பாவிலும் போதைக்காக சானிடைசர் குடித்த மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிரகாசம் மாவட்டம் குரிச்செடு கிராமத்தில், கொரோனா ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிருமிநாசினியில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் கலந்து அருந்தினர்.

  இதில் 16 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 200 பேர் சானிடைசர் குடித்திருந்தது தெரியவந்தது.

  இந்தநிலையில் கடப்பா மாவட்டத்தின் பெண்ட்லிமரி கிராமத்தை சேர்ந்த சுமார் 10 பேரும் அதேபோல சானிடைசரை குடித்துள்ளனர்.

  அவர்களில் ஒபுலேஷ், பீமையா, சென்னகேசவலு ஆகியோர் நேற்று மாலை மரணமடைந்தனர். மீதமுள்ள ஏழு பேருக்கும் கடப்பா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  Published by:user_73
  First published: