மிரட்டும் பேனர்கள், கறுப்புக் கொடிகள்... ஆந்திராவுக்குள் மோடி நுழைய எதிர்ப்பு!

மோடிக்கு எதிர்ப்பு

ஆந்திராவுக்கு பிப்ரவரி 10-ம் தேதி ஒரு கறுப்பு நாள் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திரப் பிரதேசத்துக்கு நாளை (பிப். 10) பிரதமர் மோடி வரவுள்ளநிலையில் தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் உள்பட மாநிலமே மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 3 மணி அளவில் ஆந்திரா வர உள்ளார். குண்டூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மோடியின் ஆந்திர வருகைக்கு மாநிலம் தழுவிய எதிர்ப்பு நிலவி வருகிறது.

ஆந்திராவின் ஆளும்கட்சியான தெலுங்கு தேசத்தின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவுக்கு பிப்ரவரி 10-ம் தேதி ஒரு கறுப்பு நாள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோடி வந்திறங்க உள்ள விஜயவாடா விமான நிலையத்தின் அருகில் மோடி எதிர்ப்பு பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. மோடியின் உருவ பொம்மை எரிப்புக்கும் ஆளும் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், மத்திய சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் அதை தடுத்துள்ளனர்.

மேலும் பார்க்க: குரூப்-1 தேர்வை ஒத்திவைத்த டிஎன்பிஎஸ்சி... காரணம் என்ன?
Published by:Rahini M
First published: