ஒரு தலைக்காதல்... எலும்புகளை எரித்து நாடகமாடி பெண்ணைக் கடத்திய இளைஞர்...!

Youtube Video

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஒரு தலையாக காதலித்த பெண்ணை வீட்டிற்குள் வைத்து சமையல் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீயிட்டு கொளுத்தியதாக நாடகமாடி அந்த பெண்ணை கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  ஆந்திர மாநிலம் பகீர்பள்ளியை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணமோகன். இவர் கடப்பாவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

  காதலிக்க மறுத்து வந்த அந்த பெண்ணை கடத்த கிருஷ்ணமோகன் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த பெண்ணின் பெற்றோர்கள் இல்லாததை அறிந்து இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  அந்த பெண் சமையல் கேஸ் வெடித்து தீயில் கருகி இறந்து எலும்பு கூடு மட்டுமே மிஞ்சியது போல் செட்டப் செய்துள்ளார். பின்னர், வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை புர்கா அணிவித்து கடத்தி சென்றுள்ளார்.

  இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் இளைஞர் கிருஷ்ணமோகனை வேலூரில் வைத்து கைது செய்து அந்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

  Published by:Sankar
  First published: