என்.பி.ஆர் குறித்து தீர்மானம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஜெகன் மோகன் ரெட்டி

  • Share this:
    என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக, ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என்.பி.ஆரில் எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் என்.பி.ஆரில் உள்ள சில கேள்விகளை நீக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவது என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்றார்.

    மேலும் 2010 ஆம் ஆண்டு நடைமுறையே தற்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.



    Also see...
    Published by:Vaijayanthi S
    First published: