முகப்பு /செய்தி /இந்தியா / ஆந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்.. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!

ஆந்திரா தலைநகர் விசாகப்பட்டினம்.. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!

ஆந்திர முதலமைச்சர்

ஆந்திர முதலமைச்சர்

ஆந்திர பிரதேசம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர பிரதேசம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிந்தது. அப்போது அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் இரு மாநிலங்களுக்கு பொதுத் தலைநகராக விளங்கும் எனவும், அதற்குள் ஆந்திரா தனித் தலைநகரை நிர்மாணிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்சியமைத்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, அமராவதியை புதிய தலைநகராக நிர்மாணித்து பணிகளைத் தொடங்கினார்.ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

மேலும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகரமாகவும், கர்நூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற ஆந்திர அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் மூன்று தலைநகர் திட்டத்தை கைவிட்டுள்ளது ஆந்திர அரசாங்கம்.

First published:

Tags: Andhra Pradesh, Jagan mohan reddy