ANDHRA PRADESH MINOR BOY MARRIED GIRL IN CLASS ROOM SKV
அரசுப்பள்ளி வகுப்பறையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்... சஸ்பெண்ட் செய்த பள்ளிநிர்வாகம்
பள்ளி சிறுமிக்கு தாலி கட்டிய சிறுவன்
திருமணம் செய்து கொண்ட இரண்டு பேர் மற்றும் திருமனத்திற்கு உதவிய மற்றொரு மாணவி ஆகிய மூன்று பேரையும் பள்ளியில் இருந்து டி.சி. வழங்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில், அரசுப்பள்ளி வகுப்பறையில் சக மாணவிக்கு தாலிகட்டிய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ராஜமுந்திரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன், கடந்த 17ம் தேதி தனது வகுப்பில் படிக்கும் மாணவிக்கு பள்ளி வகுப்பறையில் வைத்து தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கல்லூரி முதல்வரின் பார்வைக்கு சென்ற நிலையில் திருமணம் செய்து கொண்ட இரண்டு பேர் மற்றும் திருமனத்திற்கு உதவிய மற்றொரு மாணவி ஆகிய மூன்று பேரையும் பள்ளியில் இருந்து டி.சி. வழங்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த காட்சிகள் தலைமை ஆசிரியரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து திருமணம் செய்துகொண்ட இரு சிறுவர்கள் மற்றும் அவருக்கு உதவிய ஒரு மாணவி ஆகியோரை பள்ளியில் இருந்து நீக்கியும், மாற்று சான்று அளித்தும் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.