ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆந்திரா மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள்- முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டம்

ஆந்திரா மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள்- முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டம்

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

மாநிலத்தின் அத்தனைப் பகுதிகளிலும் வாழும் மக்களிடம் கருத்து கேட்கும் பணி ஆந்திராவில் நடைபெற்று வருகிறது

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைய வாய்ப்பு உள்ளது என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

  அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும் கர்னூல் சட்ட தலைநகராகவும் விளங்கும் என ஜெகன் மோகன் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் பன்முகத்தன்மை நிலவ அரசு புதுமையான எண்ணங்களை வெளிப்படுத்துவது அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் ஜெகன் மோகன் கூறுகையில், “தென் ஆப்பிரிக்க நாடுகளில் மூன்று தலைநகரங்கள் முறை அமலில் உள்ளது. நமக்கும் 3 தலைநகரங்கள் வரலாம். அரசின் மூன்று அங்கங்களுக்கும் தனித்தனி தலைநகரங்கள் செயல்படும். இவ்விவகாரத்தில் இறுதி முடிவை மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு எடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக மாநிலத்தின் அத்தனைப் பகுதிகளிலும் வாழும் மக்களிடம் கருத்து கேட்கும் பணி ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

  மேலும் பார்க்க: ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான பாலிவுட் ‘கான்’கள் மெளனம் காப்பது ஏன்?

  Published by:Rahini M
  First published:

  Tags: Andhra Pradesh