ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓடும் ரயில் இறங்கி பிளாட்பாரத்தில் சிக்கிய நபர்.. துரித நடவடிக்கையால் தப்பிய உயிர்

ஓடும் ரயில் இறங்கி பிளாட்பாரத்தில் சிக்கிய நபர்.. துரித நடவடிக்கையால் தப்பிய உயிர்

ரயில் பிளாட்பாரத்தில் சிக்கிய நபர் பத்திரமாக மீட்பு

ரயில் பிளாட்பாரத்தில் சிக்கிய நபர் பத்திரமாக மீட்பு

ஓடும் ரயில் இறங்கி பிளாட்பாரத்தில் சிக்கிய நபர் ரயில்வே காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தப்பிய உயிர் தப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nandyal, India

  நகர்ந்து சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் ஒருவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கு இடையே சிக்கிக்கொண்ட நபரை பிளாட்பாரத்தை உடைத்து ரயில்வே காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

  ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள பெட்டான்சேரு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவர் கடந்த வியாழக்கிழமை இரவு ஹூப்ளி -விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடகாவில் இருந்து நந்தியாலா வந்தார். ரயிலில் அவர் தூங்கி விட்ட நிலையில் அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தாண்டி வெள்ளிக்கிழமை காலை ரயில் கிட்டலூர் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து புறப்பட்டு செல்வதை தூங்கி எழுந்து தெரிந்து கொண்டார்.

  கிட்டலூர் ரயில் நிலையத்திலிருந்து அந்த ரயில் அப்போது மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. எனவே தூக்க கலக்கத்துடன் அவர் நகர்ந்து சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது கால் தவறி விழுந்த அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்டார். இதனை கவனித்த ரயில்வே கார்டு உடனடியாக ரயிலை நிறுத்த செய்தார்.

  இதையும் படிங்க: பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த பாஜக பிரமுகர் மகன் கைது!

  பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர்,ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோர் ரவிக்குமாரை மீட்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். ரவிக்குமார் வசமாக சிக்கிக்கொண்ட நிலையில், பிளாட்பாரத்தை உடைத்து அவரை மீட்டனர். இடுப்பில் காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நந்தியாலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Accident, Andhra Pradesh, Railway