ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அம்பாபுரத்தை சேர்ந்த பிரகாஷ் ராவ் தம்பதிக்கு இரண்டு மகள்கள். இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து அவர்கள் கணவன் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் பிரகாஷ் ராவ் தம்பதியினர் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். மிகவும் பாசத்துடன் இருந்த அந்த நாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டது. சொந்த குழந்தை போல் வளர்த்து வந்த நாய் இறந்து விட்டதால் தம்பதியினர் கடும் சோகத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் அந்த நாய் இறந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு நினைவு நாள் அனுஷ்டித்து வந்தனர் அந்த தம்பதியினர். கடந்த ஆண்டு வளர்ப்பு நாய்க்கு நினைவு நாள் வந்தபோது அதனுடைய சிலை ஒன்றை வீட்டின் முன் ஏற்பாடு செய்து சுமார் 200க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வரவழைத்து அவர்களுக்கு உணவு வழங்கினர். நாயின் நினைவு நாளான நேற்றும் அதே போல் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு வழங்கி தங்கள் வளர்ப்பு நாயின் நினைவு நாளை பிரகாஷ் ராவ் தம்பதியினர் கடைபிடித்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் பணி நியமன மோசடி: மேற்கு வங்கஅமைச்சரின் கூட்டாளி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அமலாக்கத்துறை சோதனையில் அம்பலம்!
தனது வளர்ப்பு நாய் மீதான அன்பு குறித்து பிரகாஷ் ராவ் கூறுகையில், எங்களது குழந்தையாகவே அதை நாங்கள் பார்க்கிறோம். இத்தனை வருடங்களாக எங்களுடன் வளர்ந்து விசுவசமாக இருந்த ஜீவன் அது. எனவே, எங்களின் கடமையாகவே அதன் நினைவு தினத்தை இவ்வாறு கடைபிடிக்கிறோம் என்றார்.
செய்தியாளர்- புஷ்பராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Pet Animal