Home /News /national /

பூரண மதுவிலக்கு டூ கட்டுப்பாடு: மதுக்கொள்கையில் யூ-டர்ன் அடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

பூரண மதுவிலக்கு டூ கட்டுப்பாடு: மதுக்கொள்கையில் யூ-டர்ன் அடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஜெகன் மோகன் ரெட்டி!

ஜெகன் மோகன் ரெட்டி!

கடந்த 2021 - 21 நிதியாண்டில் மதுவிற்பனை மூலம் 17,600 கோடி ரூபாயை ஆந்திர அரசு வருமானமாக பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஆந்திராவில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அறிவித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அரசின் மதுபான கொள்கையில் சமரசம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

2019ம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அதிரடியான முடிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

தேர்தலுக்கு முன்பாக ஆந்திராவில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். எனவும் உயர் முக்கியத்துவம் கொண்ட விஷயமாக பார்க்கப்பட்ட மதுவிற்பனைக்கு தடை கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் ஒரு ஆண்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அறிவித்தார்.

எனினும் அவர் முதல்வராக பொறுப்பேற்ற சிறிது நாட்களில் அதுவரை தனியார் நடத்தி வந்த மதுவிற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார். தமிழகத்தில் டாஸ்மாக் போல ஆந்திராவில் ‘ஆந்திரப் பிரதேச டிரிங்க்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்’ மூலமாக மதுக் கடைகள் நடத்தப்படும் என அறிவித்தார். கு
மேலும் கடை திறக்கும் நேரத்தை குறைத்ததுடன், 4380 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையை இரண்டு ஆண்டுகளில் 2934 ஆகவும் குறைத்திருக்கிறார். இருப்பினும் அங்கு பூரண மதுவிலக்கு இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஆட்சிக்கு வந்து இரண்டாவது ஆண்டை பூர்த்தி செய்திருக்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர அரசின் மதுக்கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்திருப்பதாகவும் அது குறித்த 16 பக்க விளக்க கையேடு ஒன்றையும் நேற்று வெளியிட்டுள்ளார்.

பூரண மதுவிலக்கு என்பதில் இருந்து கட்டுப்பாடுகள் என்ற அளவிற்கு ஆந்திர மதுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மது எனும் அரக்கனிடமிருந்து குடும்பங்களை காப்பாற்ற குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் எனவும் ஜெகன் அறிவித்துள்ளார்.

Read More:  நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மன்னிப்பு கேட்கச் சொல்லும் கோவா அமைச்சர்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடந்தது என்ன?

பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் மதுவிற்பனையை ஆதாரமாக காட்டி ஆந்திர அரசு 10,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 - 22 நிதியாண்டிற்கு மதுவிற்பனையை ஈடாக காட்டி மேலும் 16,000 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2021 - 21 நிதியாண்டில் மதுவிற்பனை மூலம் 17,600 கோடி ரூபாயை ஆந்திர அரசு வருமானமாக பெற்றுள்ளது.

Read More:   100 பேருக்கு கொரோனாவை பரப்பிய திருமண நிகழ்ச்சி; மணமகளின் தந்தை உட்பட 4 பேர் மரணம்!

எனினும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது ரகங்களில் நுகர்வு 37 சதமும், பீர் விற்பனை 70 சதமும் குறைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். வருமானத்தையும் ஈட்டி, நுகர்வையும் குறைப்பது மிகவும் சவாலான செயல். ஆனால் அதனை நோக்கி தான் ஆந்திர அரசு சென்றுகொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.

Read More:   ஆம்புலன்ஸ் மறுப்பு: மருத்துவமனையிலிருந்து நடந்தே வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்!

மதுபானங்களின் விலையை இரண்டு ஆண்டுகளில் 125% வரை உயர்த்தியிருக்கிறது ஆந்திர அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published:

Tags: Andhra Pradesh, Jagan mohan reddy

அடுத்த செய்தி