ஆந்திர மாநிலம் குண்டூரில் திருமணமான ஒரு சில நாட்களில் மாப்பிளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பாலநாடு மாவட்டம், மாச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண் குமார். கடந்த 11ம் தேதி, குண்டூர் மாவட்டம் தெனாலி நகரம் விஞ்சிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, கடந்த 16ம் பெண் வீட்டார் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த 12ம் தேதி புதுமணத் தம்பதிகள் இருவரும் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். அன்று மாலை, தெனாலி நகர் பேருந்து நிலையத்தில் வைத்து கிரண் குமார் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்..! - நிற்கதியாய் நிற்கும் பரிதாபம்
இதனையடுத்து, கிரண் குமாரை காணவில்லை எனவும், அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால், தெரியப்படுத்தும்படியும் பெண் வீட்டார் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்தனர்.இந்நிலையில், கடந்த 16ம் தேதி கிருஷ்ணா நதியின் குறுக்கே பிரகாசம் தடுப்பணையில் அடையாளம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டது.
கடந்த வாரங்களில், காணவில்லை என்று புகாரளித்த அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு காவல்துறை தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து சடலத்தை அடையாளம் கண்ட கிரண் குமாரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும், துயரமும் காத்திருந்தது. சிதைந்த நிலையில் உள்ள மகனின் சடலத்தை தாய் அடையாளம் கண்டார்.
'பொருத்தமான ஜோடி' என்று ஊர் கூடி வாழ்த்திய ஒரு வாரத்திற்குள், இப்படி ஒரு செய்தியைக் கேட்டறிந்த பெண் சொல்லொணாத் துயர் உற்று வருந்தினர். காவல்துறையினர் இது தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மறைந்த கிரண் குமாருக்கு முதலிரவு தொடர்பான அச்சங்கள் இருந்து வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மணவாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சத்தை போக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்கொலை என்ற மோசமான நிலைக்கு வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கிராமங்களில் தொடரும் மின்வெட்டு.. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்குவதாக தகவல்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Sucide