• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆந்திரா: கருணை அடிப்படையில் 55 பெண் ஆயுள் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அமைச்சர் தகவல்

ஆந்திரா: கருணை அடிப்படையில் 55 பெண் ஆயுள் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அமைச்சர் தகவல்

கைதி (மாதிரி  படம் )

கைதி (மாதிரி படம் )

ஆந்திராவில் 55 பெண் ஆயுள் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அமைச்சர் மேகதோட்டி சுச்சரிதா தகவலளித்துள்ளார்.

  • Share this:
    ஆந்திராவில் ஐந்து ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்த பெண் கைதிகளை மனிதபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஆந்திராவில் 147 பெண் கைதிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சுதந்திர தினத்தையொட்டி அவர்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அவர்களில் 55 பேரை விடுவிக்க ஜெகன் மோகன் அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த வாரம் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் மேகதோட்டி சுச்சரிதா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கருத்து தெரிவித்த சுச்சரிதா, குடும்ப அமைப்பில் பெண்கள் ஒரு முக்கிய பங்காற்றுவதாகவும் அவர்கள் இல்லையென்றால் குடும்ப நிறுவனமே கேள்விக்குறியாகும் என்றும் கூறினார். மேலும், அவர்கள் தம்மை வேகமாக திருத்திக்கொள்வார்கள் என்றும் குற்றவுணர்வு கொண்டு இனி குற்றம் புரியாமல் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

    சிறைத்துறை உயரதிகாரியான முஹம்மது அஹ்சன் ரெஸா, விடுவிக்கப்படவுள்ள பெண்களில் சிலர் தம் தண்டனை காலத்திலேயே பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், இன்னும் சிலர் தையல் வேலை, எம்ப்ராய்டிங் உள்ளிட்ட பிற திறன்களைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: