ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பொது வெளியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடந்த இச்சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும், இச்சம்பவம் சிசிடிவியில் பதிவானதால், அதனை ஆதாரமாக வைத்து தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அம்மாநில டிஜிபி டிஜி சவாங்க் கூறுகையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை ஆதாரங்களாக கொண்டும், சிசிடிவி காட்சி அடிப்படையிலும் குற்றவாளி பிடிப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், அந்த மாணவி கக்கனி சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் வரும்படி கூறியுள்ளார். ஆனால், அம்மாணவி வண்டியில் ஏற மறுத்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அம்மாணவியின் கழுத்திலும் வயிற்றிலும் சரமாரியாக குத்தி விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பினார். பின்னர், சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் உடனே அம்மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read |
“இயற்கையை நேசித்தவர் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த பரிதாபம்”- 9 பேரின் உயிரை பறித்த திடீர் நிலச்சரிவு!
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அம்மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவியின் கொலைக்கு என்ன காரணம் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுதந்திர தினத்தன்று இளம்பெண் ஒருவர் சாலையில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உயிரிழந்த அம்மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் அறிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தை கவனித்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் எம்.சுசரிதா மாணவியின் உடல் வைக்கப்பட்ட அரசு பொது மருத்துவமனைக்கு சென்று இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். மேலும், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், மாணவியின் கொலை சம்பவம் துயரமாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிராக தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஆந்திர அரசின் தோல்வியை உணர்த்துகிறது. இதனை அரசும் கண்டுகொல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.