கொரோனா 3ஆவது அலை : ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு

ஜெகன் மோகன் ரெட்டி

குறிப்பிட்ட பள்ளியிலேயே கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும்.

 • Share this:
  கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்வது குறித்து ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தி, சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

  ஆந்திர பிரதேச மாநிலத்தில், கடந்த திங்கட் கிழமை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், இண்டர்மீடியட் பள்ளிகளும் திறக்கப்பட்டன. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அங்கே பள்ளிகள் இயங்கி வருகின்றன.

  இந்நிலையில், கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், “கிராம, வார்டு செயலகங்களை கொரோனா பரிசோதனை மையங்களாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  இதற்காக அந்த நேரத்தில் குறிப்பிட்ட பள்ளியிலேயே கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய சடங்குகளுக்கு செல்வோர், முன் அனுமதி பெற வேண்டும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்” என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், அண்டை மாநிலமான கேளராவில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க 48 மருத்துவமனைகளில் வார்டுகள் மற்றும் ஐ.சி.யூ.க்களை தயார் நிலையில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அங்கே, அடுத்த 3 மாதங்களுக்குள் 60 சதவீத வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  Must Read : ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடியில் கோவில் கட்டிய எம்.எல்.ஏ.

  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: