மே 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!

ஜெகன்மோகன் ரெட்டி

சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் 147 தொகுதிகளில் ஜெகன் மோகன் வெற்றி பெற்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெற்ற அபார வெற்றியை அடுத்து வருகிற 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

இன்று மாலைக்குள் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி 25-க்கு 24 என்ற கணக்கில் மக்களவையின் பெரும்பான்மை தொகுதிகளையும் கைப்பற்றும் வெற்றிச்சூழல் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் 150 தொகுதிகளில் ஜெகன் மோகன் முன்னிலையில் உள்ளார். சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியும் இதர தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றுள்ளது.

வரலாற்றுச் சாதனை படைத்த பாதையாத்திரைகள், ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து என ஜெகன் மோகன் ரெட்டியின் பிரசார யுத்திகளே அவரின் வெற்றியை உறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: மேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா? மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Rahini M
First published: