ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாட்டு.. டான்ஸ்.. வனப்பகுதியில் உற்சவ நிகழ்ச்சி நடத்திய மாவோயிஸ்டுகள்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!

பாட்டு.. டான்ஸ்.. வனப்பகுதியில் உற்சவ நிகழ்ச்சி நடத்திய மாவோயிஸ்டுகள்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!

கிராம மக்கள்

கிராம மக்கள்

வார உற்சவம் நிகழ்ச்சியில் மாவோயிஸ்டுகளுடன் கிராம மக்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chhattisgarh, India

ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் உற்சவ நிகழ்ச்சி நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வார உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில், ஆந்திரா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் மாவோயிஸ்டுகளின் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

அப்போது, மாவோயிஸ்டுகள் தங்கள் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும், பொதுமக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இது தொடர்பான வீடியோவை மாவோயிஸ்ட் இயக்கம் வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="853530" youtubeid="afVaeuxD-9o" category="national">

வார உற்சவம் நிகழ்ச்சியில் மாவோயிஸ்டுகளுடன் கிராம மக்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து எல்லையோர வனப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

First published:

Tags: Andhra Pradesh, Chattisgarh, Maoist