• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரன் 6 மடங்கு பணக்காரர்

சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரன் 6 மடங்கு பணக்காரர்

சந்திரபாபு நாயுடு- அவரது 3 வயது பேரன்  நர தேவான்ஷ்

சந்திரபாபு நாயுடு- அவரது 3 வயது பேரன் நர தேவான்ஷ்

சந்திரபாபு நாயுடுவின் பேரன் நர தேவான்ஷின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரனான நர தேவான்ஷின் சொத்து மதிப்பு 18.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட 6 மடங்கு அதிகம் என அவரது மகன் நர லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் அம்மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார். நேற்று அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்பத்தின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை அறிவித்தார். அப்போது, கடந்த ஆண்டு ரூ. 15.21 கோடியாக இருந்த தனது சொத்துக்கள் இந்த ஆண்டு ரூ. 21.40 கோடியாக அதிகரித்துள்ளது.

இதில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.46 லட்சமாக உள்ளது. அவரது கடன் மதிப்பு ரூ. 5.64 கோடியிலிருந்து ரூ. 5.31 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஹைதராபாத், ஜுபிளி ஹில்ஸில் கட்டப்பட்ட புதிய வீட்டின் மதிப்பு ரூ. 7.75 கோடியிலிருந்து ரூ. 8.96 கோடியாக அதிகரித்துள்ளது.

நாயுடுவின் மனைவியான புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு குடும்பத்தில் உள்ளவர்களைவிட மிக அதிகமா உள்ளது. கடந்த ஆண்டு ரூ. 25.41 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு ரூ. 31.01 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் அவரது கடன் ரூ.20.90 கோடி ரூபாயிலிருந்து 22.35 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதில் லோகேஷின் மனைவி பிரம்மனியின் சொத்து மதிப்பு 15.01 கோடியில் இருந்து சரிந்து ரூ. 7.72 கோடியாக குறைந்துள்ளது. அவரது மொத்த கடன்களின் மதிப்பு ரூ. 36.14 லட்சத்திலிருந்து ரூ. 5.66 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால், லோகேஷ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, சந்திரபாபு நாயுடுவின் பேரன் நர தேவான்ஷின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ரூ. 11.54 கோடியாக இருந்த நாயுடுவின் பேரன் தேவாஷின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு ரூ.18.71 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாயுடுவின் மகனும் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளரான லோகேஷ் ஒவ்வொரு வருடமும் குடும்ப சொத்துகளின் மதிப்பு குறித்து மக்களுக்கு அறிவிப்பது வழக்கம்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: