ஆந்திராவிலுள்ள நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு! சட்டம் இயற்றி அசத்திய ஜெகன்

ஜெகன் மோகன் ரெட்டி

தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஆந்திர மாநில உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு சட்டம் 2019 என்ற பெயரில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கண்டிப்பாக 75% பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

  ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தேர்தல் பிரச்சாரத்துக்காக பாதயாத்திரை மேற்கொண்டிருந்தபோது தனியார் துறைகளில் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

  அதன்படி, திங்கள்கிழமை ஆந்திர மாநில சட்டப்பேரவையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஆந்திர மாநில உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு சட்டம் 2019 என்ற பெயரில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  அந்தச் சட்டத்தின்படி, அரசு தனியார் பங்களிப்பில் உருவாகும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திட்டங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் 75% ஆந்திரப் பிரதேச மக்களுக்கு வழங்கப்படவேண்டும். அந்த சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்துக்கு தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் கிடைக்கவில்லையென்றால் அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை அளிக்கவேண்டும். அதனால், தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் இல்லை என்று வாதம் செய்ய முடியாது.

  இந்த சட்டத்தின் மூலம், இந்தியாவிலேயே 75% வேலை வாய்ப்புகள் மாநில மக்களுக்கு உறுதி செய்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது. முன்னதாக, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத், ஜூலை 9-ம் தேதி 70% வேலை வாய்ப்புகள் மாநில மக்களுக்கு வழங்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்துள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: